
* டத்தோஶ்ரீ எம்.சரவணன் தலைமை
* சிங்கப்பூர் அருண் மகிழ்நன் சிறப்புரை
*இரா.முத்தரசன் வரவேற்புரை
கோலாலம்பூர்: மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவரும், முன்னாள் துணையமைச்சருமான மக்கள் தலைவர் அமரர் டான்ஶ்ரீ சி.சுப்பிரமணியம் அவர்களின் 81-வது பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் நினைவுச் சொற்பொழிவு கீழ்க்காணும் தேதியில் நடைபெறவிருக்கிறது.
நாள்: ஞாயிற்றுக்கிழமை 26 அக்டோபர் 2025
நேரம்: பிற்பகல் 3.30 மணி முதல் (தேநீர் விருந்துபசரிப்புடன்)
இடம்: நேதாஜி மண்டபம், மஇகா தலைமையகக் கட்டடம்,
எண்: 1, ஜாலான் ரஹ்மாட், ஜாலான் துன் இஸ்மாயில் (வழி), கோலாலம்பூர்
டான்ஶ்ரீ சுப்ராவின் மலாயாப் பல்கலைக் கழகத் தோழரான சிங்கப்பூரைச் சேர்ந்த திரு அருண் மகிழ்நன், “டான்ஶ்ரீ சுப்ரா: பல்கலைக் கழக இனிய நினைவுகள்” என்ற தலைப்பில் சொற்பொழிவை வழங்குவார். அருண் மகிழ்நன்,
சிங்கப்பூர் மின்மரபுடமைத் திட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் என்பதுடன் சிங்கப்பூர்த் தமிழர் கலைக் களஞ்சியத்தின் தலைமை ஆசிரியராகவும் செயலாற்றுகிறார்.
இந்த நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தலைமை தாங்குவார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் சார்பில் இரா.முத்தரசன், வரவேற்புரை நிகழ்த்துவார். மேலும் விவரங்களுக்கு கைப்பேசி எண்: +6012-2326967
இந்நிகழ்ச்சி யூடியூப், முகநூல் இணைப்புகளின் வழி நேரலையாகவும் ஒளிபரப்பாகும்.
https://youtube.com/live/QfFAz8er0mo
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஆசியான் மாநாடு காரணமாக சாலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு போக்குவரத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





