Home நாடு பிரதமர் அன்வார் இப்ராகிமின் தீபாவளி வாழ்த்து

பிரதமர் அன்வார் இப்ராகிமின் தீபாவளி வாழ்த்து

272
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: “வணக்கம். அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்” எனத் தமிழிலேயே கூறி பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தன் முகநூல் பக்கத்தில் காணொலி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

“தீபாவளி மகிழ்ச்சியுடன் வந்து, ஒளி இருளை வென்று அகற்றும் “ஒளி விழா”வின் ஆன்மாவை நமக்குக் கொண்டுவந்துள்ளது. அது நன்மை தீமையை அடக்குவது போல், அறிவு அறியாமையை வெல்வதையும் குறிக்கிறது. பல்வேறு கலாச்சாரம் மற்றும் மத நம்பிக்கைகளால் வளமான ஒரு சமூகமாகிய நாம், பரஸ்பர மரியாதையும் புரிந்துணர்வையும் தொடர்ந்து வளர்த்தெடுக்க வேண்டியது அவசியம். இந்த விழா தரும் வாய்ப்பை ஒன்றுபட்ட மனப்பாங்கை வளர்க்க, உதவி தேவைப்படுபவர்களை அணுகி, நம் தேசத்தின் வலிமைக்கான அடிப்படையான ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்படுத்த பயன்படுத்துவோம்” என தன் வாழ்த்துச் செய்தியில் அன்வார் தெரிவித்தார்.

“இந்த ஆண்டு தீபாவளி நன்றியுணர்வும் புதிய சிந்தனையூட்டும் ஆற்றலுடனும் கொண்டாடப்படட்டும்; இதன் மூலம் மக்களின் மரியாதையும் நிலையும் உயர்ந்து, மேலும் ஒற்றுமை மற்றும் நலனுடன் கூடிய மலேசியாவை நோக்கி நாம் முன்னேறுவோம். அனைத்து இந்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!” எனவும் பிரதமர் காணொலி வழியான தன் தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.