Home நாடு தொழிலாளர் தின வாழ்த்துக்கள்

தொழிலாளர் தின வாழ்த்துக்கள்

3975
0
SHARE
Ad

labour-dayகோலாலம்பூர், மே 1- தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள் என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும்.

அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது.

அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன. இந்நாள், பிரபலமாக மே தினம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நாள் என்று அறியப்படுகின்றது.

#TamilSchoolmychoice

 

மே 1 தொழிலாளர் தினம்

பார் முழுக்க பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு மருந்து போட்ட நன்னாள். உழைக்கும் வர்க்கத்திற்கான உயரிய நாள். காலவரையற்ற உழைப்பு, மிருகத்தனமான,கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள தொழிலாளர் அமைப்புகள் மேற்கொண்ட தொடர் போராட்டங்களும் பட்ட கஷ்டங்களும் கணக்கற்றவை.

தொழிலாளர் கூட்டத்தின் முதல் உரிமைக்குரல் 1806ஆம் ஆண்டு அமெரிக்காவிலும்,ஆஸ்திரேலியாவிலும் ஒலித்தது.அதுவரை நடைமுறையில் இருந்த 15 முதல்20 மணி நேர வரையிலான அசுரத்தனமான உடல் உழைப்பை எதிர்த்து 10மணி வேலை நேரம் கேட்டு ஒலித்தக் குரல்கள் முதலாளி வர்க்கத்தால் ஒழித்து கட்டப்பட்டன.

30 வருடங்கள் உறங்குவதாய் தெரிந்த உணர்வுகள் 1837 லில் மீண்டும் புது எழுச்சி கண்டது.இம்முறை சீற்றம் கொண்டது. சீறி எழுந்தது.முதலாளி வர்க்கத்தின் செவிட்டு செவிப்பறைகளை அடித்து கிழித்தது.ஆட வைத்தது.விளைவு, பாகுபாடோடு ஓர் சட்டம். அமெரிக்காவில் நடைமுறைபடுத்தப்பட்டது.

அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு மட்டும் 10 மணிநேரம் வகுக்கப்பட்டது. மற்ற தொழிலாளர்கள் கைவிடப்பட்டவர்கலாயினர்.இதனால் புரட்சியின் வேகம் மீண்டும் புதுப்பொலிவு கண்டது. 1856 இல் தொளிலாளர் வர்க்கத்தின் தொடர் போராட்டம் மே 1 அன்று விடியல் கண்டது.

8மணி நேர வேலை.8 மணி நேர மன மகிழ்வு…8 மணி நேர உறக்கம்..!!!!

மே 1 தொழிலாளர்களின் வெற்றி நாளாய் விடியல் நாளாய் விடுமுறை நாளாய் ஆஸ்திரேலியாவில் அவதாரம் கண்டது.அந்த விடியல் உலகம் முழுக்க வியாபிக்க33 ஆண்டுகள் பிடித்தது.1889ஆம் ஆண்டு உலகம் முழுக்க ஒட்டுமொத்த தொழிலார்களின் புரட்சி விழா கொண்டாடப்பட்டது.

எனவே, தொழிளார்களின் சேவையை கருத்தில் கொண்டு,  உலகெங்கும் வாழ்கின்ற அன்புக்குரிய தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் செல்லியல் குழுமம் சார்பாக, உள்ளம் கனிந்த “தொழிலாளர் தின” நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.