நெகிரி செம்பிலான் வட்டாரத்தில் பல கூட்டங்களில் கலந்து கொண்ட அன்வார், சிரம்பான் நகருக்கு அருகிலுள்ள சிக்காமட் என்ற பகுதியில் நேற்றிரவு உரையாற்றியபோது சுமார் 25,000 பேர் அவரது உரையைக் கேட்கத் திரண்டனர்.
இதன் மூலம் நெகிரி செம்பிலானில் போட்டியிடும் மக்கள் கூட்டணி வேட்பாளர்கள் உற்சாகமடைந்துள்ளதோடு, நெகிரி செம்பிலான் மாநிலத்தை இந்த பொதுத் தேர்தலில் மக்கள் கூட்டணி கைப்பற்றி விடும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது.
Comments