![]() |
. |
சென்னையில் இன்று தனது ஆழ்வார்ப் பேட்டை வீட்டில் நிருபர்களுக்கு கமல்ஹாசன் பேட்டி அளித்தார். அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய பிறகு அவர் முதல் முறையாக பேட்டி அளித்தார்.மேலும் நேற்று நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.விஸ்வரூபம் படத்தை 100 கோடி செலவில் தயாரித்ததாக அவர் கூறினார். தேனாம்பேட்டையில் தான் குடியிருக்கும் வீடு உள்பட அனைத்து சொத்துக்களையும் அடமானம் வைத்து இந்த படத்தை தயாரித்து இருப்பதாக அவர் கூறினார்.விஸ்வரூபம் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாமல் போனால் தான் இந்த சொத்துக்களை இழக்கக் கூடிய நிலைமை ஏற்படும் என்று அவர் கூறினார். விஸ்வரூபம் படத்திற்கு சிறுபான்மை அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து அவர் விளக்கினார். இந்த படத்தில் இந்திய முஸ்லிம்கள் குறித்து தான் எதுவும் குறிப்பிடவில்லை என்றும் அவர் கூறினார்.
ஒரு தனி மனிதரின் பணத்தை விட நாட்டின் ஒருமைப்பாடு முக்கியம் என்று நீதிபதி கூறினார். எனது பணத்தை விட நாட்டின் ஒற்றுமை முக்கியம் என்பதை உணருவதாகவும் கமல்ஹாசன் கூறினார். நான் மதச் சார்பற்றவன். எனவே, மதச் சார்பற்ற வேறு ஒரு மாநிலத்தையோ, அல்லது நாட்டையோ நாடி தமிழ் நாட்டிலிருந்து வெளியேறுவேன் என்றும் கமல் விரக்தியுடன் கூறியுள்ளார். |