Home 13வது பொதுத் தேர்தல் அன்வாரின் பிரச்சார சூறாவளியில் ஜொகூரில் 70, 000 பேர் திரண்டனர்!

அன்வாரின் பிரச்சார சூறாவளியில் ஜொகூரில் 70, 000 பேர் திரண்டனர்!

465
0
SHARE
Ad

anwarஜொகூர் பாரு, மே 3- தேசிய முன்னணியின் கோட்டையாக கருதப்படும் ஜொகூர் மாநிலத்தில் பல்லாயிரக்கான மக்கள் கூட்டணி ஆதரவாளர்கள் அணி திரண்டதால் அந்த மாநிலமே அதிர்ந்து போனது.

கேலாங் பாத்தாவுக்கு அருகில் சுத்ரா மால் பேரங்காடியின் கார் நிறுத்தும் இடத்தில், நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் கூட்டணியின் மாபெரும் பிரம்மாண்ட பிரச்சாரத்தில் சுமார் 70,000 பேர் பங்கேற்றனர்.

ஜொகூரில் பல்வேறு இடங்களில் தம்முடைய நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இரவு 10.00 மணியள்வில் எதிர்க்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அங்கு வந்து சேர்ந்த போது மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்களின் கரவொலி விண்ணை முட்டி பிளந்தது.

#TamilSchoolmychoice

மேலும், ஜொகூர் மாநிலத்தில் நடைபெற்ற எந்த அரசியல் பிரச்சாரத்திலும் இதுவரை இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் திரண்டவில்லை.

இதற்கு முன்னதாக ஜோகூர் பாருக்கு அருகில், லார்க்கின் ஸ்டேடியத்திற்கு வெளியே நடைபெற்ற பிகேஆர் பிரச்சாரத்திற்கு 10,000 பேர் திரண்டனர்.

அம்மாநிலத்தின் மக்கள் கூட்டணி ஆதரவாளர்கள் மங்கிய ஒளியிலும் எழுச்சியுடன் வேகத்துடன் காணப்பட்டனர்.

கேலாங் பாத்தா பிரச்சாரத்தில் அன்வார் அத்தொகுதி வேட்பாளரும், ஜசெக ஆலோசகருமான லிம் கிட் சியாங்கின் கைகளை உயர்த்தி பிடித்தவாறு மேடைக்கு வந்தார். இதனைக் கண்ட கூட்டத்தினர் பெரும் ஆரவாரம் செய்தனர்.

மே 5இல் ஒரு மாற்றம்  ஏற்படுவதற்கு இது ஒரு வரலாற்றுப்பூர்வமான தருணம் என்று அன்வார் தமது உரையில் அன்வார் குறிப்பிட்டார்.

மேலும் அரசாங்கத்தை மாற்றுவதற்கு எஞ்சியிருப்பது இன்னும் இரண்டு தினங்களே. திடமான ஓர் அரசாங்கத்தை கொண்டிருப்பதற்கான காலம் கனிந்து விட்டது என்று அன்வார் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், மிகப் பெரிய எண்ணிக்கையில் திரண்டதற்காக ஜோகூர் மக்களை பாராட்டினார்.