Home அரசியல் “வேதமூர்த்தி எங்களிடம் வைத்த கோரிக்கை வேறு; தேசிய முன்னணியிடம் கையெழுத்திட்ட கோரிக்கை வேறு – அன்வார்...

“வேதமூர்த்தி எங்களிடம் வைத்த கோரிக்கை வேறு; தேசிய முன்னணியிடம் கையெழுத்திட்ட கோரிக்கை வேறு – அன்வார் இப்ராகிம்

634
0
SHARE
Ad

anwar featureகோலாலம்பூர், மே 3- எந்த அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளாத கோரிக்கைகளை எங்களிடம் முன் வைத்த வேதமூர்த்தி, அனைவருமே ஏற்றுக் கொள்ள வகையிலான கோரிக்கைகளை தே.மு.விடம் முன் வைத்துள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

தே.மு.விடம் முன் வைத்த கோரிக்கைகளை எங்களிடம் வழங்கியிருந்தால் அவர் காட்டிய இடத்தில் ஆயிரம் முறை கையொப்பம் இட்டிருப்பேன் என்றும், அவர் அரசியல் நாடகத்தில் எங்களை ஒரு கருவியாக ஆக்கிவிட்டார் என்றும்  அவர் தெரிவித்தார்.

இதுவரை மலேசியா வரலாற்றில் யாருமே பேசாத அளவிற்கு இந்துக்களை இழிவுப்படுத்தி விமர்சனம் செய்திருக்கும் சுல்கிப்ளியை வேட்பாளராக நிறுத்தியதற்கு வேதமூர்த்தி கேள்வி எழுப்புவாரா? என்ற கேள்வியையும் அன்வார் இப்ராகிம் முன் வைத்தார்.

#TamilSchoolmychoice

மேலும் அம்னோவின் 50 ஆண்டுகால ஆட்சியில் இந்திய சமுதாயம் பின்தங்கி விட்டதாக  உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்த வேதமூர்த்தி இன்று அவர்களுடன் கைகோர்த்து இருப்பது நியாயமா என்பதை பொதுமக்களே தீர்மானிக்கட்டும் என்று அன்வார் தெரிவித்தார்.

“சுல்கிப்ளியை வேட்பாளராக நிறுத்தியதற்கு இதுவரை வாய் திறக்காத ம.இ.கா, அன்வார் துணைப்பிரதமராக இருந்தபோது ஆலயங்களில் மணி அடிக்க வேண்டும் என்று கூறியவர் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறது.

நான் அவ்வாறு சொல்லவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவ்வாறு சொல்லியிருந்தால் ஏன் ம.இ.கா. வாய் திறக்கவில்லை. அப்படி என்றால் எதற்கும் கேள்வி கேட்க துணிவில்லாத கட்சி என்பதை ம.இ.கா. ஒப்பு கொள்ளுமா?”  என்றும் அன்வார் இப்ராகிம் கேள்வி எழுப்பினார்.