Home நாடு எதிர்கட்சியினரின் கருஞ்சட்டைப் போராட்டம் சட்டத்திற்குப் புறம்பானது – காவல்துறை அறிவிப்பு

எதிர்கட்சியினரின் கருஞ்சட்டைப் போராட்டம் சட்டத்திற்குப் புறம்பானது – காவல்துறை அறிவிப்பு

538
0
SHARE
Ad

n_ismailomar_latestகோலாலம்பூர், மே8 – தேர்தல் முடிவுகளை ஆட்சேபித்து இன்று இரவு நடைபெறவிருக்கும் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான கருஞ்சட்டை போராட்டத்தை, தேசிய காவல்துறை சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவித்துள்ளது.

இது குறித்து தேசிய காவல்துறைத் தலைவர் இஸ்மாயில் ஓமார் கூறுகையில்,

“எதிர்கட்சியினரால் இன்று நடத்தப்படவிருக்கும் கருஞ்சட்டைப் போராட்டம், பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இன்றி அமைதியான முறையில்  ‘அமைப்போராட்டம் 2012’ என்ற சட்டப் பிரிவின் கீழ் நடைபெற வேண்டும்.

#TamilSchoolmychoice

ஒரு வேளை அனுமதியின்றி அணிவகுப்பு செய்தாலோ, போராட்டவாதிகள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினாலோ அல்லது சட்டத்திற்கு புறம்பான செயல்களைச் செய்தாலோ அதில் கலந்து கொள்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் முடிவுகளில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாகக் கூறி எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், இன்று இரவு 8.00 மணியளவில் கருஞ்சட்டைப் போராட்டத்தை நடத்தப்போவதாக கடந்த திங்கட்கிழமை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.