Home 13வது பொதுத் தேர்தல் மாஹ்கோத்தா தொகுதி வாக்குப்பெட்டியில் இருந்த நூசா ஜெயா வாக்குகள் – பாஸ் கட்சி சார்பாக...

மாஹ்கோத்தா தொகுதி வாக்குப்பெட்டியில் இருந்த நூசா ஜெயா வாக்குகள் – பாஸ் கட்சி சார்பாக காவல்துறையில் புகார்

455
0
SHARE
Ad

 

Untitled-1குளுவாங்,மே 9 –  நூசா ஜெயா சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 4 வாக்குச்சீட்டுக்கள் மாஹ்கோத்தா சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பெட்டியில் இருந்ததாக காவல்துறையில் இன்று புகார் செய்யப்பட்டுள்ளது.

ஜோகூர் மாநில பாஸ் இளைஞர் அணித்தலைவர் கைருல் ஃபைஸி அகமத் காமில் குளுவாங் காவல்துறையில் இன்று அளித்துள்ள புகாரில்,

#TamilSchoolmychoice

“மாஹ்கோத்தா சட்டமன்ற தொகுதியில் மே 5 பொதுத்தேர்தலுக்காக முன்கூட்டியே வாக்களித்தவர்களின் வாக்குகள் எண்ணப்பட்ட போது, அதில் நூசா ஜெயா சட்டமன்ற தொகுதியில் பாஸ் சார்பாகப் போட்டியிட்ட சலாஹுதீன் பின் ஆயுப் பெயர் கொண்ட வாக்குச்சீட்டுக்கள் இருந்ததை பாஸ் கட்சி வாக்குகளை எண்ணும் முகவர் கண்டறிந்துள்ளார்.

இதுபற்றி தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த போதும், அவை செல்லா ஓட்டுக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் மாஹ்கோத்தா சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பெட்டிகளில் குளறுபடிகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மாஹ்கோத்தா சட்டமன்ற தொகுதி, குளுவாங் நாடாளுமன்றத்திற்கு உட்பட்டது. அதே நேரத்தில் நூசா ஜெயா தொகுதி கேலாங் பாத்தா நாடாளுமன்றத்திற்கு உட்பட்டது. இருவெவ்வேறு தொகுதிகளின் வாக்குகள் எப்படி ஒன்றாகக் கலந்தன என்று தற்போது ஜோகூர் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.

பொதுத்தேர்தலில் பாஸ் கட்சியின் சார்பாக  நூசா ஜெயா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட சலாஹுதீன் பின் ஆயுப், தேசிய முன்னணி வேட்பாளர் ஸைனி பக்கரிடம் 2,201 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.