Home உலகம் லண்டன் சௌத்வார்க் பகுதிக்கு துணை மேயராக இந்தியர் தேர்வு

லண்டன் சௌத்வார்க் பகுதிக்கு துணை மேயராக இந்தியர் தேர்வு

480
0
SHARE
Ad

ulagamலண்டன், மே 14 – இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள சௌத்வார்க் பகுதிக்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

லண்டனில் கவுன்சிலராக உள்ள சுனில் சோப்ரா 2013,14ம் ஆண்டுக்கு சௌத்வார்க் பகுதிக்கு துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் பிறந்தவரான சோப்ரா லண்டனில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார்.

சௌத்வார்க் பகுதியில் 1.5 சதவீத இந்தியர்கள் வசிக்கின்றனர். இந்த பகுதிக்கு முதன் முதலில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட ஒரே இந்தியர் சேப்ராதான்.

#TamilSchoolmychoice

துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட் டது குறித்து சோப்ரா கூறுகையில், ”‘நான் இந்தியனாக பிறந்து பிரிட்டனில் வசிப்பது குறித்து பெருமைப்படுகிறேன். இது எனக்கும், எனது குடும்பத்துக்கும் மட்டும் பெருமை இல்லை. மொத்த இந்திய சமுதாயத்துக்குமே பெருமை சேர்க்கும் விஷயம். இந்தியர்களுக்கு தொடர்ந்து உழைப்பேன்”’ என்றார்.