Home உலகம் இந்தியா, அமெரிக்காவுடன் பாகிஸ்தான் சுமுக உறவு – நவாப் ஷெரீப் உறுதி

இந்தியா, அமெரிக்காவுடன் பாகிஸ்தான் சுமுக உறவு – நவாப் ஷெரீப் உறுதி

483
0
SHARE
Ad

Tamil-Daily-News_65419733525வாஷிங்டன், மே 14 – பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பத்திரிக்கை ஒன்றுக்கு நவாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில் “நான் ஏற்கனவே பதவியில் இருந்தபோது பாகிஸ்தான், அமெரிக்கா இடையே நல்ல உறவு இருந்தது. அதை மேலும் வலுப்படுத்த விரும்புகிறேன்.

பாகிஸ்தான் பகுதிகளில் அமெரிக்காவுக்கு எதிர்ப்பாளர்கள் மீது விமான தாக்குதல் நடத்துவதை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஏனெனில் இது பாகிஸ்தான் மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் “விமான தாக்குதல்களை நிறுத்துவது குறித்து அமெரிக்க தலைவர்களுடன் பேசுவேன். இந்த விஷயத்தில் சுமுகமான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

அதேபோல இந்தியாவுடன் சுமுக உறவு கொள்ளவும், ஆப்கானிஸ்தானுடன் சமாதானமாக செல்லவும் பாகிஸ்தான் விரும்புகிறது. ராணுவத்துடன் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. முஷாரப் தனது சொந்த பலத்தால் என்னை பதவியிலிருந்து நீக்கினார். அதற்கு ராணுவம் காரணம் என்று கருதவில்லை” என்றும் நவாப் ஷெரிப் தெரிவித்துள்ளார்.