Home நடந்த நிகழ்ச்சிகள் பழனிவேலுவின் மகன் திருமண வரவேற்பில் பிரதமர், துணைப் பிரதமர் பங்கேற்பு

பழனிவேலுவின் மகன் திருமண வரவேற்பில் பிரதமர், துணைப் பிரதமர் பங்கேற்பு

806
0
SHARE
Ad

Palani-Slider--2கோலாலம்பூர், பிப்ரவரி 2 – ம.இ.கா தேசியத் தலைவரும் பிரதமர் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவின் இரண்டாவது மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று கோலாலம்பூர் பெர்ஜெயா டைம்ஸ் ஸ்குவேர் மண்டபத்தில் நடைபெற்றது.

பழனிவேலுவின் மகன் சண்முகவேல் மற்றும் ஜூலியட் ஜேக்கப் இருவரின் திருமணம் கடந்த ஜனவரி 23ஆம் தேதி ஏற்கெனவே பினாங்கில் நடைபெற்றது.

நேற்று கோலாலம்பூரில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும், துணைப் பிரதமர் மொய்தீன் யாசினும் தங்களின் துணைவியரோடு கலந்து சிறப்பித்தனர். அவர்களை பழனிவேலுவின் குடும்பத்தினர் வரவேற்றனர்.

#TamilSchoolmychoice

ஏறத்தாழ ஒருமணி நேரம் அந்த திருமண வரவேற்பில் பிரதமர். துணைப் பிரதமர் தம்பதியர் கலந்து கொண்டு மற்ற விருந்தினர்களுடன் அளவளாவினர்.

இந்த விருந்தில் முன்னாள் ம.இ.கா தேசியத் தலைவர் சாமிவேலுவும் மேலும் ஏறத்தாழ 2,000 விருந்தினர்களும் கலந்து சிறப்பித்தனர்.

33 வயதான மணமகன் சண்முகவேல் பழனிவேலுவின் இரண்டாவது மகனாவார். அவர் கட்டிடக் கலைஞராகப் பணிபுரிகின்றார். பழனிவேலுவுக்கு நான்கு புதல்வர் உள்ளனர்.

31 வயதான மணமகள் ஜூலியட் ஒரு வானொலி அறிவிப்பாளராகப் பணியாற்றுகின்றார்.

-பெர்னாமா