Home இந்தியா பா.ஜனதாவிலிருந்து ராம் ஜெத்மலானி நீக்கம்

பா.ஜனதாவிலிருந்து ராம் ஜெத்மலானி நீக்கம்

597
0
SHARE
Ad

mp-ram-jபுதுடெல்லி, மே 29- கட்சிக்கு விரோதமாக பேசியதாக பிரபல வழக்கறிஞரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ராம் ஜெத்மலானி (படம்) பா.ஜனதாவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பா.ஜனதா தலைவர்களுக்கு எதிராக அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் ராம்ஜெத் மலானி, கட்சியின் கொள்கைகள் மற்றும் முடிவுகள் குறித்தும் அண்மையில் விமர்சித்திருந்தார்.

குறிப்பாக மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது பா.ஜனதா மென்மையான போக்கை கடைபிடிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் ராம்ஜெத் மலானியின் கட்சி விரோத பேச்சு குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு அளிக்கப்பட்ட நோட்டீசுக்கு அவர் பதில் அளிக்காததால், அவரை கட்சியிலிருந்து 6 ஆண்டுகள் நீக்கியுள்ளதாக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இனிமேல் ராம்ஜெத் மலானி மாநிலங்களவையில் சுயேட்சை உறுப்பினராக கருதப்படுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.