Home One Line P2 இந்தியாவின் முன்னாள் அமைச்சர் – மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானார்

இந்தியாவின் முன்னாள் அமைச்சர் – மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானார்

827
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரும், பாஜக அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சராகப் பணியாற்றியவருமான ராம் ஜெத்மலானி தனது 95-வது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை உடல்நலக் குறைவால் காலமானார்.

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் தங்களின் அனுதாபங்களைத் தெரிவித்தனர். பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேரடியாக ராம் ஜெத்மலானி இல்லம் சென்று அவரது நல்லுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

வாஜ்பாயி தலைமையிலான பாஜக அமைச்சரவையில் 1996 முதல் 2000 வரை சட்ட அமைச்சராகப் பதவி வகித்த ராம் ஜெத்மலானி பின்னர் கருத்து வேறுபாடுகளினால் தனது அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகினார்.

#TamilSchoolmychoice

நாட்டின் பிரபல வழக்குகளில் இவர் வழக்காடியிருக்கிறார். அதில் குறிப்பிட்டத்தக்கது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கு ஆகும். கனிமொழிக்காக 2ஜி ஊழல் வழக்கிலும் வழக்கறிஞராகப் பணியாற்றியவர் ஜெத்மலானி.