Home இந்தியா அரசு அமைப்புகளை தவறாக பயன்படுத்தி காங்கிரஸ் வெற்றி காணமுடியாது: மோடி

அரசு அமைப்புகளை தவறாக பயன்படுத்தி காங்கிரஸ் வெற்றி காணமுடியாது: மோடி

631
0
SHARE
Ad

modiஅகமதாபாத், மே 31-அகமதாபாத்தில் காங்கிரஸ் கட்சி இளைஞர்கள் பாரதீய ஜனதாவில் இணையும் கூட்டத்தில் கலந்துகொண்டு முதல் அமைச்சர் நரேந்திர மோடி பேசினார். அப்போது காங்கிரஸ் குறித்து மோடி கூறியதாவது:-

சுவற்றில் எழுதியிருப்பவற்றை காங்கிரஸ் நன்றாக பார்க்கவேண்டும். சி.பி.ஐ-யை தவறாக பயன்படுத்தி காங்கிரஸ் நாட்டை பிடிக்க முடியாது. சி.பி.ஐ. போன்ற அரசு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதை காங்கிரஸ் முதலில் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

இன்று மக்கள் மத்திய அரசு மீது நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள். மாநிலத்தில் இடைத்தேர்தலும், அடுத்து பாராளுமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது. இதில் அவர்கள் செய்யும் தவறுகளுக்கு அதிக விலை கொடுத்தாகவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.