Home நாடு சர்ச்சைக்குள்ளாகும் “குட்டிப் புலி” படத்தின் “அக்கா மக” மலேசியப் பாடல்

சர்ச்சைக்குள்ளாகும் “குட்டிப் புலி” படத்தின் “அக்கா மக” மலேசியப் பாடல்

921
0
SHARE
Ad

Kutti-Puli-poster-Sliderஜூன் 3 – அண்மையில் பிரபல நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளிவந்திருக்கும் “குட்டிப் புலி” படத்தின் பின்பாதியில் சசிகுமார் பாடுவதாக இடம்பெறும் “அக்காமக…அக்காமக.. எனக்கொருத்தி இருந்தாளே” என்ற மலேசியப் பாடல் தமிழகத்தில் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பி வருகின்றது.

#TamilSchoolmychoice

ஆனால், இந்த பாடலை உருவாக்கி இசையமைத்த டார்க் கீஸ் (Dark Keys) இசைக்குழுவின் அனுமதியின்றி இந்த பாடல் எடுத்து வெளியிடப்பட்டதாக தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது.

“எந்தவித உரிமமும் (ராயல்டி) கொடுக்கப்படாமல் இந்தப் பாடலை எடுத்து வெளியிட்டிருப்பதால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் இதற்காக தகுந்த விளக்கத்தை அளிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது நீதிமன்ற வழக்கு தொடரப்படும்” என்று கலைஞர்களுக்கான கார்யவான் அமைப்பைச் சேர்ந்த டிபி கானா பத்திரிகைச் செய்தியொன்றில் தெரிவித்துள்ளார்.

குட்டிப் புலி படத்தில் ஒரு உள்ளூர் ரவடியாக வலம் வரும் கதாநாயகன் சசிகுமார் எல்லாக் காட்சிகளிலும் சாதாரண சட்டை லுங்கியோடுதான் காணப்படுவார். ஒரு கட்டத்தில் அவருக்கும் கதாநாயகியான லட்சுமி மேனனுக்கும் காதல் பிறக்க, ஒரே மகன் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறானே என்ற மகிழ்ச்சியில்  மகனுக்காக ஜீன்ஸ் டி-ஷர்ட் போன்ற நவீன ஆடைகளை சசிகுமாரின் தாயார் சரண்யா வாங்கி வந்து தருகின்றார்.

அந்த ஆடைகளை அணிந்து கொண்டு தனது குழுவினருடன் சசிகுமார் ஆடும் விறுவிறுப்பான உற்சாக நடனத்தின் போதுதான் மலேசியப் பாடலான அக்கா மக ஒலிக்கின்றது.

ஏற்கனவே, மலேசியப் பாடகர் யோகி பி தனது பாடல்கள் மூலம் தமிழகத்தில் பிரபலமாகியுள்ளார்.

தற்போது இந்த “அக்கா மக” பாடலின் மூலம் மற்றொரு மலேசிய இசைக் குழுவிற்கும் மவுசு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.