Home இந்தியா தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு இன்று 90-வது பிறந்தநாள்- தொண்டர்கள் கொண்டாட்டம்

தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு இன்று 90-வது பிறந்தநாள்- தொண்டர்கள் கொண்டாட்டம்

1083
0
SHARE
Ad

karunanithiசென்னை,ஜூன்3- தி.மு.க தலைவர் கருணாநிதியின் 90-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். பிறந்தநாளையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு சி.ஐ.டி. காலனியில் உள்ள வீட்டில் கருணாநிதி மரக்கன்று நட்டார்.

காலை 7 மணிக்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

#TamilSchoolmychoice

பின்னர் கோபாலபுரத்தில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். காலை 9 மணி முதல் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் கருணாநிதி கலந்து கொண்டார். அங்கு கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்களின் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டார்..

மாலை 6 மணிக்கு தென் சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கருணாநிதி ஏற்புரை நிகழ்த்துகிறார்.