Home கலை உலகம் குடிப் பழக்கத்தால் என்னை நானே சீரழித்துக் கொண்டேன்: நடிகர் தர்மேந்திரா வேதனை

குடிப் பழக்கத்தால் என்னை நானே சீரழித்துக் கொண்டேன்: நடிகர் தர்மேந்திரா வேதனை

720
0
SHARE
Ad

dharmendraஜூன் 4- பிரபல பாலிவுட் கதாநாயகன் தர்மேந்திரா, தனது மகன் சன்னி டியோல், மகள் பாபி டியோல் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள ‘யாம்லா பாக்லா தீவானா-2’ திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது.

மும்பையில் நடைபெற்ற இந்த படத்தின் அறிமுக விழாவில் நடிகர் தர்மேந்திரா பேசியதாவது:-

திரைப்பட தொழிலில் உள்ள வியாபார நுணுக்கங்களை இப்போது தான் முழுமையாக உணர்ந்துள்ளேன். இந்த படத்திற்காக நான் என் மகன், மகள் 3 பேரும் கடுமையாக உழைத்துள்ளோம்.

#TamilSchoolmychoice

ஒரு நடிகன் என்ற முறையில் என்னை நானே குடிப் பழக்கத்தால் சீரழித்துக் கொண்டேன். இப்போதெல்லாம் நான் குடிப்பதே இல்லை. தற்போது மனிதாபிமானத்தின் மீது எனக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

முதன்முறையாக நாங்கள் 3 பேரும் ‘அப்னே’ படத்தில் ஒன்றாக நடித்தோம். இதை ரசிகர்கள் வரவேற்றனர். ஆனால், மிகவும் சோகமான கதையம்சத்துடன் உள்ளதாக கூறினார்கள். அதனால், எனது ரசிகர்கள் சிரித்து மகிழ இந்த படத்தை எடுத்துள்ளேன்.

இந்த படத்தில் சன்னி டியோலுடன் கதாநாயகியாக நடிப்பதற்காக பல பெண்களை நேர்காணல் செய்தோம். இறுதியாக, கிரிஸ்டினா அகிவாவை தேர்ந்தெடுத்துள்ளோம்.

இந்த தேர்வுக்கு பிறகு சன்னி டியோலின் கதாபாத்திரத்தில் கதாநாயகியை கட்டிப்பிடித்து என்னால் பாட்டு பாட முடியவில்லையே என்று பொறாமைப்படுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.