Home இந்தியா 90-வது பிறந்த நாள்: கருணாநிதிக்கு ‘போப் ஆண்டவர்’ வாழ்த்து

90-வது பிறந்த நாள்: கருணாநிதிக்கு ‘போப் ஆண்டவர்’ வாழ்த்து

989
0
SHARE
Ad

karunanithiசென்னை, ஜூன். 4- தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, ரோம் நகரில் உள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ், பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார்.

உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக விளங்கும் போப் ஆண்டவர் பிரான்சிஸ்சை இந்திய கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் நேரில் சந்தித்தார்.

அப்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி 5 முறை முதல்-அமைச்சராக இருந்து தமிழகத்திற்கு செய்த சாதனைகளை அறிந்ததாகவும், 90-வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் கூறினார். வாழ்த்து மடல் ஒன்றையும் கருணாநிதியிடம் வழங்கும்படி இனிகோ இருதயராஜிடம் கொடுத்து அனுப்பினார்.

#TamilSchoolmychoice

போப் ஆண்டவர் அனுப்பி இருந்த வாழ்த்துச் செய்தியில் கூறி இருந்ததாவது:-

இந்திய சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக தாங்கள் விளங்குவது எம்மை மகிழச்செய்கிறது.

உங்களுக்கு இயற்கையின் ஆசிர்வாதம் இருக்கிறது. 90-வது வயதில் தாங்கள் அடியெடுத்து வைக்கும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் தங்களுக்கு எனது வாழ்த்துக்களையும் இறை ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வாழ்த்து மடலை சி.ஐ.டி. காலனியில் இருந்து கருணாநிதியிடம் நேற்று மாலை இனிகோ இருதயராஜ் வழங்கினார்.

அவருடன் சென்னை மயிலை உயர் மறை மாவட்ட முன்னாள் பேராயர் டாக்டர் சின்னப்பா, மாடம்பாக்கம் எல்.எஸ்.எஸ்.மோகன், மல்லிகா மோகன் பெந்தகொஸ்தே திருச்சபை பாஸ்டர் பின்னி ஜோசப், அருட்தந்தை இருதயம், தனிஸ்லாஸ், ஜான் கென்னடி, ஜெரோம், அமல்ராஜ், ஹமில்டன் உள்ளிட்ட கிறிஸ்தவர்களும் கருணாநிதியை சந்தித்தனர்.

போப் ஆண்டவர் வழங்கிய வாழ்த்துச் செய்தியை பெற்றுக் கொண்ட கருணாநிதி, தன்னை வாழ்த்தி பிறந்தநாள் செய்தி அனுப்பிய போப் ஆண்டவருக்கு தமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.