Home 13வது பொதுத் தேர்தல் மே 25 கறுப்பு 505 பேரணி: வழக்கை எதிர்த்து பத்ருல் ஹிசாம் விசாரணை கோரினார்

மே 25 கறுப்பு 505 பேரணி: வழக்கை எதிர்த்து பத்ருல் ஹிசாம் விசாரணை கோரினார்

497
0
SHARE
Ad

badrul

கோலாலம்பூர், ஜூன் 5 – சட்டத்திற்குப் புறம்பாக கடந்த மே மாதம் 25 ஆம் தேதி பாடாங் தீமோர் திடலில் கறுப்பு 505 பேரணி நடத்தியதற்காக, எதிர்கட்சியைச் சேர்ந்த பத்ருல் ஹிஷாம் ஷஹாரின் இன்று பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

பேரணி நடத்துவதற்கு 10 நாட்களுக்கு முன்னதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறி அமைதிப் பேரணி 2012 சட்டம் 9(1) என்ற பிரிவின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

‘செகுபார்ட்’ என்று அழைக்கப்படும் Solidariti Anak Muda Malaysia  (SAMM) என்ற அமைப்பின் தலைவரான பத்ருல் ஹிஷாம் ஷஹாரின், தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்த்து விசாரணை கோரினார்.

அதோடு தான் காவல்துறையினருக்கும், நீதிமன்றத்தின் ஆணைக்கும் கட்டுப்பட்டு இன்று முறையாக ஆஜராகியுள்ளதாக கூறியதைத் தொடர்ந்து, நீதிபதி யாஸ்மின் அப்துல் ரசாக் அவரை தனது சொந்தப் பொறுப்பில் விடுதலை செய்தார்.

மேலும் இவ்வழக்கை வரும் ஜூலை மாதம் 9 ஆம் தேதிக்கு தள்ளி வைத்ததோடு, இவ்வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும் செகுபார்ட் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

செகுபார்ட் நீதிமன்றத்திற்கு ஆஜராக வரும் போது, பாதுகாப்பிற்காக 20 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.

என்னினும் செகுபார்ட் ஒரே ஒரு ஆதரவாளரோடு நீதிமன்றம் வந்தடைந்தார்.

நீதிமன்றத்திற்கு வெளியே செகுபார்ட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ நஜிப் மற்றும் மகாதீர் விரித்த வலையில் உள்துறை அமைச்சர் சாகிட் வசமாக மாட்டிக்கொண்டார். எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தலில் சாகிட்டை அழிக்கும் நோக்கில் தான் அவர்கள் இது போன்ற எதிர்கட்சித் தலைவர்களின் கைது நடவடிக்கைகளுக்கு உத்தரவிடுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.