Home கலை உலகம் விஜய் பிறந்த நாள்: ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள்

விஜய் பிறந்த நாள்: ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள்

620
0
SHARE
Ad

சென்னை, ஜூன் 5- நடிகர் விஜய்க்கு வருகிற 22-ந் தேதி பிறந்த நாள். இதையட்டி விஜய்யின் மக்கள் இயக்கத்தை சேர்ந்த மாவட்ட, நகர, ஒன்றிய இளைஞரணி கிளை மன்ற நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 3 மணி அளவில், சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நற்பணி விழாவுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.

vijayவிழாவில், சென்னை   உயர் நீதிமன்றம் பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி கலந்து கொள்கிறார். அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி, விழாவை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டு 3,900 ஏழைகளுக்கு கணினிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகளும், தையல் எந்திரங்களும் வழங்கி பேசுகிறார்.

விழாவில் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன். ராயல் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளரும், புதுவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான புஸ்ஸி ஆனந்த், மாநில செயலாளர் ரவிராஜா, துணைத்தலைவர் ராஜேந்திரன், துணைச்செயலாளர் ஏ.சி.குமார், மற்றும் பி.டி.செல்வகுமார் ஆகியோர் செய்து இருக்கிறார்கள்.