Home அரசியல் பேரணிகள் ‘சீன இனவாதத்தை’ நிரூபிக்கின்றன – மகாதீர் கருத்து

பேரணிகள் ‘சீன இனவாதத்தை’ நிரூபிக்கின்றன – மகாதீர் கருத்து

532
0
SHARE
Ad

mahathir1கோலாலம்பூர், ஜூன் 6 – தேர்தல் முடிவுகளை எதிர்த்து நாடு முழுவதும் நடத்தப்படும் பேரணிகள், தேர்தலில் ‘சீனர்களின் இனவாதத்தை’ நிரூபிக்கிறன. காரணம் அது போன்ற பேரணிகளில் அதிகமாக சீனர்களே கலந்து கொள்கின்றனர்.

அதோடு சீனர்களை மையமாக வைத்தே அப்பேரணிகள் நடத்தப்படுகின்றன என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

மேலும் “இது போன்ற பேரணிகளால் நாட்டில் இன்னும் அதிகமாக இனவாத பிரச்சனைகள் உருவாகும், மலாய்காரர்கள் அரசியலிலும், பொருளாதாரத்திலும் மேலும் பின்னடைவைச் சந்திப்பார்கள்” என்றும் மாகாதீர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் சீன இளைஞர்கள் கறுப்பு சட்டை மற்றும் முகமூடிகளை அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறார்கள். பொதுவாக மலாய்காரர்களே இது போன்ற ஆர்பாட்டங்களில் நிறைந்து காணப்படுவார்கள்.

பேரணிகளில் மலாய்காரர்கள் குறைவாகக் காணப்படுவதற்கு பாஸ் தலைவர்களுள் ஒற்றுமை இல்லாததே காரணம். நடந்த முடிந்த பொதுத்தேர்தலில் ஜசெக 38 தொகுதிகளில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதே போல் பிகேஆர் 30 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் பாஸ் கட்சியால் 21 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இதன் மூலம் ஜசெக சீனர்களின் தேர்வாக உள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஜசெக மலாய்காரர்களை வெறுக்கிறது

மலேசிய அரசியலில் தனது 60 ஆண்டுகால அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்டது என்னவென்றால், இனம் தான் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.

“சீனர்கள் தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சியான மசீச வை புறக்கணித்து ஜெசெக வின் பக்கம் திரும்ப, இனவாரியான உணர்வுகள் தான் காரணம். வேட்பாளர்களின் தகுதி அல்லது கட்சியின் தரம் ஆகியவற்றை விட இனம் என்பது முதன்மையானதாக உள்ளது.

நீண்ட காலமாக ஜசெக மலாய்காரர்களை வெறுத்து வருகிறது மற்றும் பக்காத்தானில் உள்ள மலாய் கட்சிகளை அவ்வப்போது தேர்தல் நேரத்தில் பயன்படுத்திக் கொள்கிறது” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.