Home வணிகம்/தொழில் நுட்பம் மைக்கியின் தேசிய தலைவர் கே.கே ஈஸ்வரனுக்கு டான்ஸ்ரீ விருது!

மைக்கியின் தேசிய தலைவர் கே.கே ஈஸ்வரனுக்கு டான்ஸ்ரீ விருது!

538
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 6- மலேசிய இந்தியர் வர்த்தக சங்கங்களின் சம்மேளனமான மைக்கியின் தேசிய தலைவர் டத்தோ கே.கே ஈஸ்வரன் மாட்சிமை தாங்கிய பேரரசர் துவாங்கு அப்து ஹலிம் முவாட்ஸாம் ஷா பிறந்த நாளை முன்னிட்டு  பங்லிமா செத்தியா மஹ்கோத்தா (பிஎஸ்எம்) எனும் உயரிய ‘டான்ஸ்ரீ’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

மைக்கியின் மூலம் கே.கே ஈஸ்வரன் ஆற்றிய பங்களிப்புகள் ஒரு கண்ணோட்டம்…

micci

#TamilSchoolmychoice

நாட்டின் பிரசித்திப்பெற்ற  தொழில் அதிபர்களில் ஒருவரான  டான்ஸ்ரீ கே.கே.ஈஸ்வரன், மைக்கியின் வழி இந்நாட்டு இந்திய வர்த்தகச் சங்கங்களின் வளர்ச்சிக்கு பெருமளவு உதவியுள்ளார்.

மேலும் மலேசியாவில் இந்தியர்களை முன்னணியாகக் கொண்ட, நாட்டின் 13 தொழில் துறைகளுக்கு மொத்தம்  45,000 அந்நியத் தொழிலாளர்களை தருவிக்கும் அனுமதியை அரசாங்கத்திடமிருந்து பெற்று தந்தது இவரின் சாதனைகளின் ஒன்றாக கருதப்படுகிறது. இதில், உணவகம், உலோக மறுசுழற்சி, சிகை அலங்காரம், மளிகைக்கடைகள், பத்திரிக்கை விற்பனை மற்றும் நகை வியாபாரிகள் உள்ளிட்ட துறைகள் இவற்றில் அடங்கும்.kk-easwaran

இவரின் தலைமைத்துவத்தில் தேசிய நிலையிலும், அனைத்துலக நிலையிலும்  இந்திய தொழில் முனைவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தியிருப்பதுடன், இங்குள்ள தொழில் முனைவர்கள் தங்கள் தொழில் ரீதியாக  எதிர்நோக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகளுக்கு சிறந்த முறையிலான தீர்வு கண்டுள்ளார்.

இவரின் தலைமைத்துவத்தில் மைக்கி இன்று, தேசிய நிலையிலான கொள்கை அமைப்பு கூட்டங்களில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு பெற்றுள்ளது.

நாடு முழுவதும் மைக்கி ஏற்பாடு செய்த ஒன்பது நிகழ்ச்சிகளின் வாயிலாக, 12,000 தொழில் முனைவர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், மைக்கி முன் வைத்த பரிந்துரையின் பேரில் பிரதமர் இந்தியத் தொழில் முனைவர்களுக்கென  180 மில்லியன் வெள்ளி  சிறப்பு நிதி வழங்கினார்  என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்களில் இளைஞர்களும் தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தின் பேரிலேயே அரசாங்கம் இந்த உதவி நிதியை வழங்கியுள்ளது என டான்ஸ்ரீ கே.கே ஈஸ்வரன் அண்மையில் கூறியிருந்தார்.