Home இந்தியா திருவண்ணாமலை நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜர்

திருவண்ணாமலை நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜர்

590
0
SHARE
Ad

திருவண்ணாமலை, ஜூன் 6- திருவண்ணாமலை காந்தி சிலை அருகே கடந்த ஆண்டு தே.மு.தி.க. சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் பேசிய விஜயகாந்த் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அரசு வக்கீல் அன்பழகன் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக ஏற்கனவே 3 முறை நடந்த விசாரணையில் விஜயகாந்த் ஆஜராகவில்லை.

Vijaykanth-Slider

#TamilSchoolmychoice

இந்நிலையில் இன்று விஜயகாந்த் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிமன்றம்  உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று விஜயகாந்த்  நீதிமன்றத்தில் ஆஜரானார்.

ஆரணி எம்.எல்.ஏ. பாபு முருகவேல் தே.மு.தி.க. வக்கீல் அணி மாவட்ட செயலாளர் காலிங்கராயன் தலைமையில் ஐகோர்ட்டு வக்கீல்கள் பாலாஜி, பன்னீர்செல்வம், சந்தோஷ்குமார், சிவாஜி உள்பட 40க்கும் மேற்பட்ட வக்கீல்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். இதனால் நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

இதையொட்டி திருவண்ணாமலை நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டிருந்தது. முன்னதாக தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் விஜயகாந்துக்கு மாவட்ட எல்லையில் வரவேற்பு அளித்தனர்.