அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
“மூன்று குண்டுகள் பாய்ந்ததன் காரணமாக, சுக்லாவின் உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டன. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அவர் உயிரிழந்தார்’ என்று குர்கானில் சுக்லா அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனையின் தலைவர் யதின் மெஹதா கூறினார்.
அதில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேரந்த 28 பேர் உயிரிழந்தனர், சுக்லா பலத்த காயமடைந்தார். ராய்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவரது உடம்பில் இருந்த குண்டுகள் அகற்றப்பட்டன.
தொடர்ந்து, தீவிர சிகிச்சைக்காக குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் 26-ஆம் தேதி அவர் அனுமதிக்கப்பட்டார்.
விடுதலைப் போராட்ட தியாகி ரவி சங்கர் சுக்லாவின் மகனான வி.சி. சுக்லா, 1957-ஆம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினரானார். ஒன்பது முறை மக்களவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.1975ஆம் ஆண்டில் நெருக்கடி நிலையின்போது மத்திய ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார். முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் அரசில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சராகவும், மத்திய நீர் வளத் துறை அமைச்சராகவும் சுக்லா பதவி வகித்துள்ளார்.