Home கலை உலகம் நடிகை மீரா நந்தனுக்கு விரைவில் திருமணம்

நடிகை மீரா நந்தனுக்கு விரைவில் திருமணம்

563
0
SHARE
Ad

நடிகை மீரா நந்தனுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. இவர் தமிழில் சூரியநகரம், காதலுக்கு மரணமில்லை, அய்யனார், வால்மிகி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

MEERAமலையாளத்தில் முன்னணி நடிகையாக உள்ளார். கேரளாவில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் மீரா நந்தன் பங்கேற்று பேசும் போது விரைவில் தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டார்.

திருமணம் எப்போது மாப்பிள்ளை யார் என்ற விவரம் எதையும் அவர் வெளியிடவில்லை. பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

கேரள தொழில் அதிபர்கள் சிலரின் ஜாதகங்களை வாங்கி பொருத்தம் பார்த்து வருகிறார்களாம். ஓரிரு ஜாதகம் பொருத்தமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதில் தனக்கு பிடித்தமானவரை மீராநந்தன் தேர்வு செய்கிறார். அதன் பிறகு திருமண தேதி அறிவிக்கப்படுகிறது.

திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்க மீராநந்தன் திட்ட மிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மலையாளத்தில் இரண்டு படங்களிலும் கன்னடத்தில் இரண்டு படங்களிலும் தெலுங்கில் ஒரு படத்திலும் மீராநந்தன் தற்போது நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இப்படங்கள் முடிந்ததும் திருமணம் நடக்கும் என்கின்றனர்.