இங்கிலாந்து,பிப்.4-இருக்கும் இடமே தெரியாத அளவிலான ஓர் உளவு விமானத்தை இங்கிலாந்து தயாரித்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் எதிரிகளை மிக துள்ளியமாக இது காட்டிகொடுக்கும் வல்லமை பெற்றுள்ளது.
ஆப்கானில் உள்ள தாலிபான் அமைப்புக்கு எதிராக உபயோகிக்க இந்த பிரத்தியேக விமானத்தை இங்கிலாந்து தயாரித்துள்ளது. 15 கிராம் எடையுடைய இந்த விமானம் வெறும் 8 அங்குல நீளம் கொண்டது. விமானத்தின் மூக்கு பகுதியில் அதிநவீன மூன்று ஸ்பை கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இதனால் எதிரியின் இலக்கை மிகத் துல்லியமாகப் படம் பிடித்து, கட்டுப்பாட்டு அறைக்கு ஜி.பி.எஸ் அனுப்பி வைக்கும். சோதனை அரங்கிலிருந்து ஜாய் ஸ்டிக் உதவியுடன் இயங்குகிற இந்த உளவு விமானத்துக்கு ‘பிளாக் ஹார்னட்’ என பெயரிடப்பட்டுள்ளது.