Home கலை உலகம் பாலியல் சித்திரவதை – தொலைக்காட்சி தயாரிப்பு நிர்வாகி மீது பெப்சி உமா புகார்!!

பாலியல் சித்திரவதை – தொலைக்காட்சி தயாரிப்பு நிர்வாகி மீது பெப்சி உமா புகார்!!

644
0
SHARE
Ad

ஜூன் 23- தான் வேலை பார்த்து வந்த இடத்தில், தனக்கு பாலியல் சித்திரவதை  கொடுத்ததாக தயாரிப்பு நிர்வாகி மீது பெப்சி உமா கொடுத்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

pepsi-uma-quits-kalaignar-tvசில ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி  நிகழ்ச்சியான ‘பெப்சி உங்கள் சாய்ஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் உமா.

அப்போது முதல் பெப்சி உமா என்று அழைக்கப்பட்டவர், பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளை தவிர்த்து விட்டு ஒதுங்கியிருந்தார்.

#TamilSchoolmychoice

தற்போது மீண்டும் சின்னத்திரையில் கால் பதித்துள்ளார். தற்போது ஒரு டி.வியில் ஆல்பம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் அந்த டி.வி.யின் தயாரிப்பு நிர்வாகியான சரவணராஜன் என்பவர் உமாவுக்கு அடிக்கடி பாலியல் சித்திரவதை கொடுத்து வந்துள்ளார்.

தனது ஆசைக்கு இணங்காவிட்டால் வேலையைவிட்டு நீக்கிவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து உமா, சென்னை கிண்டி போலீசிடம் புகார் கொடுத்தார்.

உமாவின் புகாரை ஏற்ற போலீசார், சரவணராஜனை கைது செய்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தி, பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.