Home கலை உலகம் 4-வது மாடியில் இருந்து விழுந்த நடிகை சுவர்ணா தாமஸ் கவலைக்கிடம்

4-வது மாடியில் இருந்து விழுந்த நடிகை சுவர்ணா தாமஸ் கவலைக்கிடம்

650
0
SHARE
Ad

ஜூன் 23- ருத்ரன் இயக்கி வரும் ‘வெற்றிச்செல்வன்’ என்ற தமிழ் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து இருப்பவர், சுவர்ணா தாமஸ்.

swarna-tOMASபிரணயகதா, பிளாட் ஆகிய மலையாள படங்களிலும் இவர் நடித்து இருக்கிறார். ‘புட்டி’ என்ற மலையாள படத்தின் படப்பிடிப்புக்காக அவர் கொச்சி வந்தார்.

அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 4-வது மாடியில் தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்தார். அங்கிருந்து தினமும் படப்பிடிப்புக்கு சென்று வந்தார்.

#TamilSchoolmychoice

கடந்த புதன்கிழமை இரவு சுவர்ணா தாமஸ் 4-வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து கீழே விழுந்தார். அதில், அவர் பலத்த காயம் அடைந்தார். அவருடைய முதுகு எலும்பும், இடுப்பு எலும்பும் முறிந்தது.

உடனடியாக அவரை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்  சேர்த்தார்கள். டாக்டர்கள் அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து, தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

நேற்று அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது. அவர் சுய நினைவை இழந்தார். அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

அவரால் மூச்சுவிட முடியாததால், செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. அவருடைய உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள்.