Home இந்தியா தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக என். சீனிவாசன் போட்டியின்றி மீண்டும் தேர்வு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக என். சீனிவாசன் போட்டியின்றி மீண்டும் தேர்வு

674
0
SHARE
Ad

சென்னை, ஜூன் 23- தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக என். சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டார்.

srinivasanஇன்று சென்னையில் நடைபெற்ற அச்சங்கத்தின் 83-வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் அவர் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து 12-வது ஆண்டாக அவர் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

சங்கத்தின் செயலாளராக தொடர்ந்து 7-வது முறையாக காசி விஸ்வநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணை தலைவர்களாக கல்பாத்தி எஸ். அகோரம், யூ. பிரபாகர் ராவ், எஸ். ராகவன், பி.எஸ். ராமன், ஆர். கணகராஜன், வி. ரமேஷ், இணை செயலாளராக ஆர். ஐ. பழனி, உதவி செயலாளராக ஆர். எஸ். ராமசாமி, பொருளாளராக வி.பி. நரசிம்மன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.