Home இலக்கியம் வாழ்கிறது ஜீவனோடு………

வாழ்கிறது ஜீவனோடு………

912
0
SHARE
Ad

கட்டற்ற காதலில்
மட்டற்று மகிழ்ந்து கிடந்தோம்…….

கண்களால் களவு செய்து
உயிர்களை மாற்றி கொண்டோம்……

உணர்வுகளை உள்ளுக்குள்
விதைத்து கொண்டோம்……..

உயிரோடு புதைத்து
கொண்டோம்………….

#TamilSchoolmychoice

கடமைகள் அழைக்க
கண்ணியமாய் விலகி
கொண்டோம்…………

காலமெனும் விவசாயி
ஒரே களத்தில் இருந்த
நம்மை பிரித்து
வெவ்வேறு
சூழலில் நட்டான் ….

புரிதலோடு பிரிந்து
கொண்டோம் ….

ஒரு சூழலில் நண்பனின்
திருமணத்தில்
சந்த்திதோம் ….
நலம் விசாரித்தாய்…….

மெல்லமாய் எட்டி பார்த்த
காதலை செல்லமாய் குட்டி
இருக்கையிட்டு
அமர செய்தோம்
உள்ளுக்குள்…….

விழியோரம் கசிந்த
ஈரத்தை புன்னகை
பூக்களோடு கோர்த்து
கொண்டோம் ……

பிரியும் போது உயிர்
வலி தாங்கும்
வித்தைகள் கற்று
தந்திருந்தது வாழ்க்கை …….
……………………………………….
பிரிவிற்கு பின் ஒன்று
மட்டும் புரிந்தது…….
காமத்திற்கு அப்பாற்பட்ட
காதல் நம்மை வாழ்வித்து
கொண்டே நம்மோடு
வாழ்கிறது ஜீவனோடு……… இன்போ.அம்பிகா