Home இலக்கியம் நீங்களாவது நேசியுங்கள்

நீங்களாவது நேசியுங்கள்

930
0
SHARE
Ad

நானும் ஒரு கவிஞன்
நயமற்ற நகைகளால்
நாணலாக சாய்ந்து கிடக்கிறேன்

தீக்குள் குளித்த பூங்குளலாக
என் கவிச்சுருதி
நாதமற்று இசைக்கிறது

சூரிய ஒளியால்
சுவாசிக்கப்பட்ட நீராக என்
சுந்தர வார்த்தைகள்
சுவையற்று வறண்டுவிட்டன

கடும் மழையில்கரைந்து போன
காக்கை கூடாக
சின்னா பின்னமாய் என் சிந்தனைகள்

#TamilSchoolmychoice

உம் விளித்திரைகளுக்குள்
என் மொழித்திரை
அமிலத்தில் சோதிக்கப்பட்டு
காரமின்றி கரைந்து விட்டது

கற்புடன் படைக்கப்பட்ட என்
கவித்துவம்
கண்ணியமற்ற உம் பார்வைகளால்
கற்பழிக்க படுகின்றன

என்
மொழிகளும் கவி பேசும்
நெஞ்சமும் நீதி உரைக்கும்
கைகளும் திசை காட்டும்
பாதங்களும் யாத்திரை போகும்
பயணங்களும் அனுபவம் உரைக்கும்

வாதிக்க தடுமாறும் பிரதி வாதங்கள்
தோற்று திண்டாடும் அனுபவ ஆழங்கள்
நடுநிலையற்ற நேச தாளங்கள்
விஷம் தடவிய விமர்சன யாலங்கள் என்
கவிகளை கருவில் கொல்கின்றன

நீங்களாவது நேசியுங்கள்