Home உலகம் நியூயார்க்: சாண்டி புயலால் பாதிக்கப்பட்ட சுதந்திர தேவி சிலை வரும் 4ம் தேதி மீண்டும் திறப்பு

நியூயார்க்: சாண்டி புயலால் பாதிக்கப்பட்ட சுதந்திர தேவி சிலை வரும் 4ம் தேதி மீண்டும் திறப்பு

1078
0
SHARE
Ad

Statue_of_Liberty_FREE_lநியூயார்க், ஜூலை 2- அமெரிக்காவை சாண்டி புயல் புரட்டிப் போட்டதையடுத்து நியூயார்க் நகரில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த சுதந்திர தேவி சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் வரை ஆண்டுதோறும் சுமார் 35 லட்சம் பார்வையாளர்கள் சுதந்திர தேவி சிலையையும், அதன் அருகாமையில் உள்ள பூங்காவையும் கண்டு களித்து வந்தனர். இந்த சிலையின் தலைப் பகுதியில் உள்ள கிரீடத்தில் இருந்து நியூயார்க் நகர துறைமுகத்தின் எழில்மிகு காட்சியை பார்த்து ரசிக்க முடியும்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை அமெரிக்காவை உலுக்கி எடுத்த சாண்டி புயலின் கோரத்தாண்டவத்தால் சுதந்திர தேவி சிலையை ஒட்டியுள்ள பகுதிகள் வெள்ளக் காடாக மாறின.

#TamilSchoolmychoice

அந்த சிலை அருகே இருந்த நடைபாதைகள், மின் சாதனங்கள், நீரிறைக்கும் இயந்திரங்கள் போன்றவை பழுதடைந்ததால் கடந்த 8 மாதங்களாக அவற்றை சீர்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், ஜூலை 4ம் தேதி (நாளை மறுநாள்) அமெரிக்காவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தேவி சிலையின் சீரமைப்பு பணிகளும் நிறைவடைந்து விட்டதால் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் சுதந்திர தேவி சிலையை வரும் வியாழக்கிழமையில் இருந்து பொதுமக்கள் பார்வையிடலாம் என நியூயார்க் அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து, ஏராளமான அமெரிக்கர்கள் இணையத்தளம்  மூலம் கட்டணத்தை செலுத்தி நுழைவுச்சீட்டுக்கு  முன்பதிவு செய்து வருகின்றனர்.