Home நாடு சுலு படையினர் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தாமதித்தது ஏன்?

சுலு படையினர் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தாமதித்தது ஏன்?

480
0
SHARE
Ad

pencerobohan-lahad-datu-terkini

கோலாலம்பூர், ஜூலை 2 – சபா மாநிலம் லகாட் டத்துவில் கடந்த மார்ச் மாதம் சுலு படையினர் ஊடுருவியபோது, அவர்கள் மீது அரசாங்கம் ஏன் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்று சபாவைச் சேர்ந்த தேசிய முன்னணியின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தேசிய முன்னணியைச் சேர்ந்த கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர் பாங் மொக்தார் ராடின் மற்றும் கலாபாக்கான் நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல் காபூர் சாலே ஆகிய இருவரும், சுலு படையினர் லகாட் டத்துவில் நுழைந்து பாதுகாப்புப் படையினரைத் தாக்கும் வரையில் அரசாங்கம் ஏன் அவர்களைத் தீவிரவாதிகள் என்று அடையாளம் காணவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

#TamilSchoolmychoice

இன்று நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி நேரத்தின் போது, சபா மக்கள் மேற்சொன்ன கேள்விகளுக்கு காரணம் அறிய விரும்புவதாக பாங் மொக்தார் ராடின் தெரிவித்தார்.

மேலும் “இதில் மூன்றாவது அணி ஏதும் சம்பந்தப்பட்டுள்ளதா ?” என்றும் அவர் தனது சந்தேகத்தை வெளிப்படுத்தினார்.

இது குறித்து மற்றொரு  நாடாளுமன்ற உறுப்பினரான அப்துல் காபூர் சாலே கூறுகையில், “என் வீட்டுக்குள் யாராவது அத்துமீறி நுழைந்தால் நான் அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்க மாட்டேன். சுட்டு விடுவேன். அவர்களுடன் நாம் ஏன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்? ” என்று கூறியுள்ளார்.

இருப்பினும், உள்துறை துணை அமைச்சரான வான் சுனாய்டி வான்  ஜபார், சுலு விவகாரத்திற்கு  3 மாதங்களுக்குள் தீர்வு கண்ட அரசாங்கத்திற்கு மக்கள் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறினார்.