Home நாடு லகாட் டத்து ஊடுருவல்: 9 பேரின் மரண தண்டனை நிலைநாட்டப்பட்டது!

லகாட் டத்து ஊடுருவல்: 9 பேரின் மரண தண்டனை நிலைநாட்டப்பட்டது!

898
0
SHARE
Ad

Hang deathபுத்ரா ஜெயா – கடந்த 2013-ம் ஆண்டு, லகாட் டத்துவில் ஊடுருவல் செய்து, பேரரசருக்கு எதிராகப் போர் தொடுக்க முயன்றதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் பிரஜைகள் 9 பேருக்கு, கூட்டரசு நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை மரண தண்டனையை நிலைநாட்டியது.

குற்றவியல் சட்டம் பிரிவு 121-ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்ட அவர்கள் 9 பேருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு, ஜூலை 26-ம் தேதி, வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து கோத்தா கினபாலு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எனினும், பேரரசர் மீது போர் தொடுக்க முயன்ற அவர்கள் 9 பேருக்கு, விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறைத் தண்டனையை, டத்தோ முகமது ஜவாவி சாலே தலைமையிலான மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றியது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அம்மேல்முறையீட்டு தீர்ப்புக்கு எதிரான மனு மீதான விசாரணை நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

விசாரணையின் முடிவில் அவர்கள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது சரியான தீர்ப்பு தான் என கூட்டரசு நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.