Home நாடு அடுக்குமாடியிலிருந்து வீசப்பட்ட நாற்காலி விழுந்து 15 வயது சிறுவன் பலி!

அடுக்குமாடியிலிருந்து வீசப்பட்ட நாற்காலி விழுந்து 15 வயது சிறுவன் பலி!

932
0
SHARE
Ad

Sripantaiflataccidentகோலாலம்பூர் – நேற்று திங்கட்கிழமை இரவு 8.15 மணியளவில், ஸ்ரீபந்தாய் அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் தளத்திலிருந்து நாற்காலி ஒன்று தலையில் விழுந்து 15 வயது சிறுவன் சதீஷ் மரணமடைந்தார்.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ், தனது தாயாருடன் சதீஷ் நடந்து சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்திருக்கிறது.

தலையில் நாற்காலி விழுந்ததில், பலத்த காயமடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

#TamilSchoolmychoice

தற்போது இச்சம்பவம் குற்றவியல் சட்டம் பிரிவு 304-ன் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் கூறுகின்றன.