Home நாடு வேட்பாளருக்கு மருத்துவப் பரிசோதனை அவசியம் – டாக்டர் சுப்ரா வலியுறுத்து!

வேட்பாளருக்கு மருத்துவப் பரிசோதனை அவசியம் – டாக்டர் சுப்ரா வலியுறுத்து!

730
0
SHARE
Ad

subra-feature-3கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் அனைத்து வேட்பாளருக்கும் மருத்துவப் பரிசோதனை அவசியம் என சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் வலியுறுத்தியிருக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பு என்பது மிகவும் முக்கியம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், ஒவ்வொரு வேட்பாளரும் அதனை உணர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் சுப்ரா குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், தங்களது உடல்நிலை குறித்து பிரதமரிடமும் தெரிவிக்க வேண்டும் என்றும் டாக்டர் சுப்ரா தெரிவித்திருக்கிறார்.