Home உலகம் ஜகார்த்தாவில் பங்குச் சந்தைக் கட்டிடம் சரிந்து விழும் பயங்கரக் காட்சி (காணொளி)

ஜகார்த்தாவில் பங்குச் சந்தைக் கட்டிடம் சரிந்து விழும் பயங்கரக் காட்சி (காணொளி)

1288
0
SHARE
Ad

indonesia building colapseஜகார்த்தா – இந்தோனிசியாவின் ஜகார்த்தா நகரில், பங்குச் சந்தைக் கட்டிடத்தின் ஒரு தளம் இன்று திங்கட்கிழமை சரிந்து விழுந்தது.

இச்சம்பவத்தில் 77 பேர் காயமடைந்தனர். அவர்களில் 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்த 2000-ம் ஆண்டு, இக்கட்டிடத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்தது.

#TamilSchoolmychoice

அதன் பாதிப்பினால் தான் இன்று கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என இந்தோனிசியக் காவல்துறைத் தெரிவித்திருக்கிறது.

இதனிடையே, கட்டிடம் இடிந்து விழும் பயங்கரக் காட்சி நட்பு ஊடகங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.