Home இந்தியா டெல்லியில் இன்று பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டம்: மோடி கலந்து கொள்கிறார்

டெல்லியில் இன்று பா.ஜனதா பாராளுமன்ற குழு கூட்டம்: மோடி கலந்து கொள்கிறார்

579
0
SHARE
Ad

புதுடெல்லி, ஜூலை 4- குஜராத் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடி கடந்த மார்ச் மாதம் பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழுவில் ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

MODIகோவாவில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், மோடியை பிரச்சாரக் குழு தலைவராக நியமித்தார்.

இந்நிலையில், பாரதீய ஜனதாவின் 12 பேர் அடங்கிய பாராளுமன்றக் குழு இன்று டெல்லியில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள, மோடி இன்று காலை டெல்லி வந்து சேர்ந்தார்.

#TamilSchoolmychoice

இந்த கூட்டத்தில், இந்த வருட இறுதியில் சில மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல் மற்றும் 2014-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் வியூகம் மற்றும் பிரச்சார யுக்தி வகுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இன்று மாலை மோடி கட்சியின் பொதுச் செயலாளர்களை சந்திக்க உள்ளார். மேலும், கட்சியின் முக்கிய தலைவர்கள் அடங்கிய குழு, மதியம் அத்வானியை சந்திக்கிறது.