ஜூலை 5 – நாடு முழுமையிலும் சர்ச்சைகளை எழுப்பி, முஸ்லீம் அல்லாதவர்களின் கண்டனத்துக்கு உள்ளானதோடு, அமைச்சரவையிலும் பிளவை ஏற்படுத்திய மதம் மாற்று சட்டம் அரசாங்கத்தால் வாபஸ் பெறப்பட்டது என துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின் இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் கூறுகையில், “குழந்தைகளை மதம் மாற்றும் சட்டம் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆழமாக கலந்தாலோசித்தோம். தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவியதால் அந்த மசோதா வாபஸ் பெறப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கூட்டரசு அரசியலமைப்பு 12 (4) ன் படி, 18 வயதுக்குக் குறைவாக உள்ள குழந்தைகளின் மதம் குறித்து முடிவெடுப்பதற்கு பெற்றோர் அல்லது பாதுகாப்பாளருக்கு மட்டுமே உரிமை உள்ளது என்றும் முகைதீன் யாசின் தெரிவித்தார்.