Home கலை உலகம் மலையாளத்தில் ஆபாசமாக நடிக்கவில்லை –இனியா

மலையாளத்தில் ஆபாசமாக நடிக்கவில்லை –இனியா

679
0
SHARE
Ad

ஜூலை 10- தமிழில் வாகை சூடவா படத்தில் சரசர சாரக் காற்று வீசும் போது சாரப்பார்த்து பேசும் போது பாடல் பாடி நடித்து பிரபலமானவர் இனியா. இப்படத்துக்காக நிறைய விருதுகளும் வாங்கினார்.

iniya-e1318426871414மவுன குரு, அம்மாவின் கைப்பேசி, மாசானி படங்களிலும் நடித்தார். ஆனால் அமலாபால் போல் பெரிய கதாநாயகர்களின் ஜோடியாக படங்கள் அமையவில்லை.

இதையடுத்து இனியா கவர்ச்சிக்கு மாறி இருப்பதாகவும் மலையாளத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் இரு படங்களில் அரைகுறை ஆடையில் ஆபாசமாக வருவதாகவும் மலையாள பட உலகில் செய்திகள் வெளியாகியுள்ளன.

#TamilSchoolmychoice

இதற்கு இனியா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–

நான் மோசமாக நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழ், மலையாள பட உலகில் என் சினிமா வாழ்க்கை நன்றாகவே போய் கொண்டு இருக்கிறது. ஆபாசமாக நான் நடிக்க மாட்டேன்.

சினிமாவில் வெற்றி பெற நெருக்கமான காட்சிகளில்  நடிக்க வேண்டும் என்பது இல்லை. மலையாள படத்தில் பாடகி கதாபாத்திரத்தில்  நான் நடிக்கிறேன் ஒரு காட்சியில் கூட அதில் ஆபாசமாக நடிக்கவில்லை.
இவ்வாறு இனியா கூறினார்.