இதையடுத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர், வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது குரல் மடலை அகற்றப்பட்டு விட்டதால் தற்போது பூரண குணம் அடைந்திருக்கிறார். ஆனாலும், முன்புபோல பேசும் தன்மையை இழந்திருக்கிறார்.
இவருக்கு தொண்டையில் ஒரு காசு அளவிற்கு துவாரம் போடப்பட்டுள்ளது. அதை கையால் மூடிக்கொண்டு மெல்லிய கீச்சு குரலில்தான் பேசுகிறார்.
விரைவில் படத்தை இயக்கவிருப்பதாக கூறும் ரமணா இதற்கான வசனம் எழுதும் பணியை துவக்கி விட்டாராம்.
இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, விஜய், பிரகாஷ் ராஜ் போன்ற நல்ல நண்பர்களால் புற்றுநோயிலிருந்து நான மீண்டு வந்திருக்கிறேன்.
என் மனைவி என்னை தாய்போல கவனிக்கிறார். எனது 40 வருட வாழ்க்கை அனுபவத்தை இந்த இரண்டு வருடம் புரட்டி போட்டுவிட்து. எல்லாவற்றிலிருந்து மீட்ட கடவுளுக்கு நன்றி. மீண்டும் சினிமாவுக்கு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.