Home உலகம் எகிப்து துணை ஜனாதிபதியாக முஹம்மது எல்பரடெய் பதவியேற்பு

எகிப்து துணை ஜனாதிபதியாக முஹம்மது எல்பரடெய் பதவியேற்பு

409
0
SHARE
Ad

கெய்ரோ, ஜூலை 15- எகிப்தில் ஏற்பட்ட மக்கள் புரட்சியை அடுத்து முன்னாள் அதிபர் முஹம்மது மோர்சியை ராணுவம் பதவி நீக்கம் செய்தது.

elbaradeiஇதனையடுத்து, முஹம்மது எல்பரடெய் பிரதமராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரை பிரதமராக நியமிப்பதற்கு பலர் ஆட்சேபனை தெரிவித்ததால் துணை அதிபராக நியமித்து தற்காலிக அதிபர் அட்லி மன்சூர் அறிவித்தார்.

அதிபர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் எகிப்தின் வெளியுறவு துறைக்கான துணை ஜனாதிபதியாக முஹம்மது எல்பரடெய் பதவி ஏற்றார்.

#TamilSchoolmychoice

ஐக்கிய நாடுகள் சபையின் அணு கட்டுப்பாட்டு கழகத்தின் முன்னாள் இயக்குனராகவும் எல்பரடெய் பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.