Home உலகம் எகிப்து துணை ஜனாதிபதி எல்பரேடி திடீர் ராஜினாமா

எகிப்து துணை ஜனாதிபதி எல்பரேடி திடீர் ராஜினாமா

873
0
SHARE
Ad

கெய்ரோ, ஆக. 15- எகிப்தின் முன்னாள் அதிபர் முஹம்மது மோர்சிக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தையடுத்து அவர் பதவி விலக ராணுவம் கெடு விதித்தது.

அந்த கெடுக்காலம் முடிந்தும் அவர் பதவி விலகாததால் முஹம்மது மோர்சியை ஜூலை 3ம் தேதி கைது செய்த ராணுவம் அவரை ரகசிய இடத்தில் அடைத்து வைத்துள்ளது.

606x341_230866_elbaradei-favourite-to-lead-egypt-இடைக்கால ஜனாதிபதியாக அட்லி மன்சூரையும், துணை ஜனாதிபதியாக எல்பரேடியையும் ராணுவம் நியமித்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், கைது செய்யப்பட்டு ரகசிய காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் முஹம்மது மோர்சியை விடுதலை செய்ய வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் எகிப்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒருமாத காலத்துக்கும் மேலாக போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துவதும், அவர்கள் கலைந்து செல்வதும், பின்னர், மீண்டும் பெருந்திரளாக கூடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதும் தொடர் வாடிக்கையாகிவிட்டது.

சிற்சில சம்பவங்களில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல் எறிந்து தாக்குவதும், பதிலுக்கு போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்துவதும் நிகழ்ந்துள்ளன. இது தவிர, மோர்சியின் எதிர்ப்பாளர்களும், ஆதரவாளர்களும் ஆங்காங்கே நேரடி மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

முஹம்மது மோர்சியை விடுதலை செய்து, மீண்டும் ஆட்சியை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்துபவர்கள் தங்களின் முகாம்களை காலி செய்துவிட்டு வெளியேற எகிப்து அரசு 48 மணி நேர கெடு விதித்திருந்தது.

கெடு நேரம் முடிந்தும் கலைந்து செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது இன்று பாதுகாப்பு படைகள் அதிரடி தாக்குதல் நடத்தின.

egyptதலைநகர் கெய்ரோவில் ரப்பா-அல் அதாவியா மசூதி அருகிலும், நஹ்தா சதுக்கம் அருகிலும் அமைக்கப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் முகாம்களை பாதுகாப்பு படையினர் ‘புல்டோசர்’களால் இடித்து அகற்றினர்.

இன்றைய துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 220 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாகவும், 10 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் மோர்சியின் ஆதரவாளர்கள் கூறினர்.

அரசு தரப்போ., பலியானவர்களின் எண்ணிக்கையை 95 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை 758 ஆகவும் குறைத்து கூறியுள்ளது.

இந்நிலையில், இன்றைய போராட்டத்தில் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த எகிப்து துணை ஜனாதிபதி எல்பரேடி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஆட்சியாளர்களின் முடிவுகளுக்கு துணை போவதும், நான் ஏற்றுக்கொள்ள மறுத்த சம்பவங்களின் எதிர்விளைவுகளுக்கு துணை போவதும் மனசாட்சியை உறுத்துவதால் துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்கிறேன்.

எகிப்து தற்போது சந்தித்து வரும் சிக்கலை சீர்படுத்த அமைதியாக தீர்த்துக்கொள்ள பல்வேறு வழிகள் இருந்தும் தற்போது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் தனக்கு உடன்பாடில்லை என்று இடைக்கால ஜனாதிபதி அட்லி மன்சூருக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் எல்பரேடி குறிப்பிட்டுள்ளார்.

தலைசிறந்த கல்வியாளரான எல்பரேடி, கடந்த 2005ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.