Home உலகம் முகமது எல்பராடி எகிப்து காபந்து அரசின் பிரதமராகிறார்

முகமது எல்பராடி எகிப்து காபந்து அரசின் பிரதமராகிறார்

574
0
SHARE
Ad

கெய்ரோ, ஜூலை 7- எகிப்தின் அதிபராக இருந்த மொர்சி கொண்டுவந்த சீர்சிருத்த கொள்கைகளுக்கு எதிராக தீவிர போராட்டம் வெடித்தது. இதையடுத்து அவரை, ராணுவம் பதவியிலிருந்து நீக்கி தடுப்பு காவலில் வைத்துள்ளது.

elbaradeiஉடனே, நீதிபதி அட்லி மகுமூத் மன்சூரை இடைக்கால அதிபராக ராணுவம் நியமித்தது.

இந்நிலையில் காபந்து அரசின் பிரதமராக எதிர் கட்சித்தலைவரான முகமது எல் பராடியின் பெயரை மொர்சிக்கு எதிரான கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

இதனையடுத்து அவர் இடைக்கால அதிபர் அட்லி மகுமூத் மன்சூரை சந்தித்து பேசியுள்ளார். இதனால் அவர் எகிப்தின் பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திர மற்றும் இடது சாரிக்கூட்டணி கட்சிகளை வழிநடத்தி செல்லும் முகமது எல் பராடி 71, ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு குழுவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.