Home இந்தியா ராமர் கோவில் கட்ட பாரதீய ஜனதா ஆர்வம்: நரேந்திரமோடி அயோத்தி செல்கிறார்

ராமர் கோவில் கட்ட பாரதீய ஜனதா ஆர்வம்: நரேந்திரமோடி அயோத்தி செல்கிறார்

578
0
SHARE
Ad

புதுடெல்லி, ஜூலை 7– அயோத்தி ராமர் கோவில் சர்ச்சைக்குரிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பக்தர்கள் செல்லவோ, வழிபாடு நடத்தவோ தடை ஏதும் இல்லை. அயோத்தியில் ராமர் கோவில் இருந்த இடத்தில் மீண்டும் பிரமாண்டமான வகையில் ராமர் கோவில் கட்ட பாரதீய ஜனதா முடிவு செய்துள்ளது.

முன்பு அத்வானி ராமர் கோவில் கட்டுவதற்காக ரதயாத்திரை சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் கோவிலில் பாரதீய ஜனதா ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதையொட்டி பாரதீய ஜனதாவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டது. குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடி பாரதிய ஜனதாவின் தேர்தல் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அவரது தீவிர ஆதரவாளரான அமித்ஷா உத்தரபிரதேச மாநில பாரதீய ஜனதா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

M_Id_380073_Narendra_Modiஇருவரும் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தை குறி வைத்துள்ளனர். இங்கிருந்து 50 பாராளுமன்ற தொகுதிகளை கைப்பற்றும் வகையில் வியூகம் வகுத்துள்ளனர். அமித்ஷா இப்போதே உத்தரபிரதேசத்தில் முகாமிட்டு நிர்வாகிகளையும், தொண்டர்களையும், தயார்படுத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் அமித்ஷா லக்னோவில் நடந்த கட்சி ஊழியர் கூட்டத்தில் பேசினார். முன்னதாக அவர் அயோத்தி சென்று ராமர் கோவிலில் வழிபட்டார். பின்னர் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், இந்த நாட்டை காங்கிரசிடம் இருந்து மீட்க வேண்டும் என்று ராமரிடம் வேண்டியதாக குறிப்பிட்டார்.

அயோத்தியில் ராமர் கோவில் பிரம்மாண்டமான முறையில் கட்டப்படும் என்றும் விரைவில் இதற்கான பணி தொடங்கும் என்றும் அமித்ஷா பேசினார். பாராளுமன்ற தேர்தல் வருவதைத் தொடர்ந்தே பாரதிய ஜனதா அயோத்தி ராமர் கோவிலில் ஆர்வம் செலுத்துவதாக கூறப்படுகிறது.

ராமருக்கு அனுமன் போல் நரேந்திரமோடிக்கும் அமித்ஷா என்று அவரது ஆதரவாளர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். அமித்ஷா அயோத்தி சென்றதைத் தொடர்ந்து நரேந்திர மோடியும் அயோத்தி ராமர்கோவில் செல்ல திட்டமிட்டுள்ளார்.

நரேந்திர மோடி அயோத்தி செல்வதை தவிர்த்து வந்தார். ஏற்கனவே விஸ்வ இந்து பரிஷத் அழைப்பு விடுத்தும் அவர் நிராகரித்து விட்டார். இந்த முறை நரேந்திரமோடி அயோத்தி செல்ல முடிவு செய்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் வகையில் அவரது அயோத்தி பயணம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அமித்ஷா அயோத்தி சென்ற போது உத்தரபிரதேச மாநில பாரதிய ஜனதா தலைவர்கள் லட்சுமிகாந்த் பாஜ்பாய், லால்ஜி தூண்டன், வினய் கட்டி யோர் ஆகியோரும் உடன் சென்றனர்.

நரேந்திர மோடி, அமித்ஷா நடவடிக்கைகளை காங்கிரஸ் உற்று கவனித்து வருகிறது.