Home இந்தியா போபர்ஸ் பீரங்கி ஊழல்: இத்தாலிய தொழிலதிபர் குவாட்ரோச்சி மரணம்

போபர்ஸ் பீரங்கி ஊழல்: இத்தாலிய தொழிலதிபர் குவாட்ரோச்சி மரணம்

572
0
SHARE
Ad

மிலான், ஜூலை 15- போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பின் விடுவிக்கப்பட்ட இத்தாலிய தொழில் அதிபர் ஒட்டாவியோ குவாட்ரோச்சி (படம்) மாரடைப்பால் காலமானார்.

கடந்த 1986ல் இந்திய ராணுவத்துக்கு தேவையான பீரங்கிகள்  சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த போபர்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டன. இதற்காக  அந்நிறுவனத்திடம்  1,500 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

imagesஇதில்  ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்தப் பீரங்கி பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டு ரூ.பல கோடி லஞ்சம் பெற்றதாக இத்தாலி தொழிலதிபர் ஒட்டாவியோ குவாட்ரோச்சி மீது குற்றம் சுமத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

இதனால்  தேடப்படும் குற்றவாளியாக  இந்திய அரசால் அறிவிக்கப்பட்டார். குவாட்ரோச்சி முன்னாள் பிரதமர் ராஜிவ், காங்., தலைவர் சோனியாவுக்கு நெருக்கமாக இருந்தவர். 1989ல் இந்த விவாகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அந்த ஆண்டு தேர்தலில் காங்., படுதோல்வியடைந்தது.

கடந்த  1999ம் ஆண்டு சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் லஞ்சப் பணம் கைமாற குவாட்ரோச்சி இடைத்தரகராக இருந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இவரை இந்தியாவுக்கு கொண்டு வர, சி.பி.ஐ., முயற்சித்தது.

இவரை கைது செய்வதற்காக, 250 கோடி ரூபாய் அளவுக்கு மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டு உள்ளது. லண்டன் வங்கியில் குவாட்ரோச்சி  அவரது மனைவி மரியா கணக்கில் பல மில்லியன் டாலர் பணம் இருப்பதாக 2003ல் தகவல் வெளியானது.

இவரது லண்டன் வங்கி கணக்கை இந்திய அரசு முடக்கி வைத்திருந்தது. முடக்க உத்தரவிட்டிருந்த சி.பி.ஐ.,க்கு தெரியாமலேயே 2006ம் ஆண்டு கணக்கு முடக்கம் நீக்கப்பட்டது. கடந்த, 2011ல் குவாட்ரோச்சி மீது தொடரப்பட்ட வழக்கை முடிக்க  சி.பி.ஐ.,க்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.

இந்நிலையில் இத்தாலியின் மிலன் நகரில் வசித்த குவாட்ரோச்சி நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் காலமானார். இந்தத் தகவலை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர்.