Home இந்தியா குவாட்ரோச்சி இறந்து விட்டதால் போபர்ஸ் ஊழலை புதைத்து விட முடியாது: பா.ஜ.க.

குவாட்ரோச்சி இறந்து விட்டதால் போபர்ஸ் ஊழலை புதைத்து விட முடியாது: பா.ஜ.க.

583
0
SHARE
Ad

புதுடெல்லி, ஜூலை 15- போபர்ஸ் ஊழலின் முக்கிய புள்ளியாக செயல்பட்ட குவாட்ரோச்சி இறந்துவிட்டதால் போபர்ஸ் ஊழலை புதைத்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி தப்புக் கணக்கு போடக்கூடாது என பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் விஜய் சங்கர் சாஸ்திரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

imagesபோபர்ஸ் ஊழல் என்ற மிகப்பெரிய ஊழல் இந்தியாவின் அரசியல் முகத்தில் படிந்த மிகப்பெரிய தழும்பு ஆகும்.

#TamilSchoolmychoice

குவாட்ரோச்சிக்கு இந்த ஊழலில் தொடர்பு இல்லை என்று இதுவரை சி.பி.ஐ. அறிவிக்கவில்லை. அவரும் நான் போபர்ஸ் பேரத்தில் யாரிடமும் லஞ்சம் வாங்கியது கிடையாது என்று கூறியதில்லை.

இடைத் தரகராக இருந்து போபர்ஸ் பேரத்தில் நான் தலையிட்டு காரியத்தை முடித்துக் கொடுத்தேன். அதற்கான தொகையை பெற்றுக் கொண்டேன் என்றுதான் குவாட்ரோச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவர் யார் சார்பாக பணம் வாங்கினார்? என்பதுதான் தற்போது எழுந்துள்ள கேள்வியாகும். எனவே, குவாட்ரோச்சி இறந்து விட்டதால் போபர்ஸ் ஊழலை புதைத்து விடலாம் என்று காங்கிரஸ் கட்சி தப்புக் கணக்கு போட்டுவிடக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

1986ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தபோது ஸ்வீடன் நாட்டில் இருந்து 285 மில்லியன் டாலர் விலையில் போபர்ஸ் ரக பீரங்கிகளை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த இத்தாலிய ஆயுத தரகரான ஒட்டாலியோ குவாட்ரோச்சி லஞ்சம் பெற்றதாகவும், அந்த தொகையில் சுமார் 64 கோடி ரூபாய் இந்திய அரசியல்வாதிகளுக்கு லஞ்சமாக தரப்பட்டதாகவும் செய்திகள் வெளியானதையடுத்து குவாத்ரோச்சியை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரிக்க மத்திய அரசு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததாக இந்த ஊழல் தொடர்பான விசாரணையின்போது சி.பி.ஐ. கூறியது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மிலன் நகரில் குவாட்ரோச்சி மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.