Home நாடு ம.இ.கா முன்னாள் பொருளாளர் கொலை வழக்கில் மூவருக்கு தூக்கு!

ம.இ.கா முன்னாள் பொருளாளர் கொலை வழக்கில் மூவருக்கு தூக்கு!

636
0
SHARE
Ad

sidambaram-ipoh-baratஈப்போ, ஜூலை 15 – கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், பேராக் மாநிலம் ஈப்போ பாராட் பகுதி முன்னாள் ம.இ.கா பொருளாளர் என்.சிதம்பரத்தை(வயது 68)  கொலை செய்த குற்றத்திற்காக மூவருக்கு இன்று ஈப்போ உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

விற்பனையாளர் ஏ.மணிமாறன் (வயது 24), வியாபாரி எஸ்.சரவணன் (வயது 29), பாதுகாவலரான கே.பெருமாள் (வயது 31) ஆகிய மூவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 11 ஆம் தேதி, இரவு 11.30 மணியளவில் ஈப்போ புந்தோங்கில் ஜாலான் வாயாங்கில் உள்ள ஒரு வீட்டில் வைத்து சிதம்பரத்தை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று ஈப்போ உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மீதிருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவியல் தடுப்புச் சட்டம் 302 வது பிரிவின் படி, நீதிபதி தியோ சே எங், அவர்கள் மூவருக்கு தூக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

#TamilSchoolmychoice

இத்தீர்ப்பைக் கேட்ட அவர்களது குடும்பத்தினர், நீதிமன்ற வளாகத்தில் குற்றவாளிகளைக் கட்டிப்பிடித்து கதறி அழுதனர்.