Home அரசியல் கெப்போங் தொகுதியின் தலைவராகப் போகும் வேள்பாரி!

கெப்போங் தொகுதியின் தலைவராகப் போகும் வேள்பாரி!

600
0
SHARE
Ad

Vel-Paari-Sliderகோலாலம்பூர், ஜூலை 16 – ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலும், துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியமும் நேரடியாக தேர்தல் பலப்பரீட்சையில் இறங்கத் தயாராகி வரும் நிலையில், தேர்தல் போட்டியினால் ம.இ.கா வில் ஒரு போதும் பிளவு ஏற்படாது என்று ம.இ.கா வின் வியூக இயக்குனர் எஸ்.வேள்பாரி தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் கட்சியின் தலைமைத்துவ தேர்தலில், உதவித் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடுவதையும் வேள்பாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

ம.இ.கா வின் மத்திய செயலவை உறுப்பினரான எஸ்.வேள்பாரி ஸ்டார் இணையதளத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில், “தற்போதைய அமைச்சரவையில் முழு அமைச்சராக இருக்கும் இந்த இருவரும் செப்டம்பர் மாதம் நடக்கும் ம.இ.கா தலைவர் தேர்தலில் நேருக்கு நேர் மோதும் வாய்ப்பு 50க்கு 50 என்ற அளவில் உள்ளது” என்று அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கிளைத்தேர்தல்கள் இப்போது தொடங்கி ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதிவரை நடைபெறும். தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெறும். அதன்பின் தலைவர் தேர்தல் செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் துணைத்தலைவர், மூன்று உதவித்தலைவர்கள், 23 ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறும்.

இதற்கிடையில், லெம்பா பந்தாய் தொகுதியில் இருந்து, வேள்பாரி தனது கிளைத்தலைவர் மற்றும் பேராளர்  உறுப்பியத்தை தற்போது கெப்போங் தொகுதிக்கு மாற்றிக் கொண்டுள்ளார் என்று ம.இ.கா வட்டாரங்கள் கூறுகின்றன.

இதன் மூலம் தற்போது கெப்போங் தொகுதித் தலைவராக இருந்து வரும் டத்தோ பஞ்சமூர்த்தி தனது தொகுதித் தலைவர் பதவியை வேள்பாரிக்காக விட்டுக்கொடுப்பார் என்று கூறப்படுகிறது.

ஆகவே, கெப்போங் தொகுதியின் புதிய தலைவராக வேள்பாரி உருவெடுப்பார் என்றும் ம.இ.கா வட்டாரங்கள் கூறுகின்றன.